Wednesday, October 19, 2011

ஹோட்டல் வசந்தம் (சவால் சிறுகதைப் போட்டி 2011)


பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வரும் வழியில்,

                                  டேய் ! பார்த்தியா ரெண்டு வருசமா கட்டிக்கிட்டு இருந்தாங்கே இப்ப தான் முடுச்சுருக்காங்கே. சும்மா சாப்பிடறதுக்கே எவ்வளோ பெரிய HOTEL ன்னு அவனுடைய பிரமிப்பை பாண்டியிடம் கூறினான் சரவணன். இங்கே ஹோட்டல் மட்டும் இல்லேடா தங்குறதுக்கு room கூட இருக்கு என தனக்கு தெரிந்ததை கூறினான் பாண்டி.

கொட்டை எழுத்துல ஹோட்டல் ன்னு போட்டுருக்கு, நீ என்னமோ உள்ளே போயி பார்த்தமாதிரி சொல்றே - சரவணன்.
 நான்தான்  போனதில்லே ஆனா எங்கப்பா போயிருக்காருடா  - பாண்டி.

உங்கப்பா கட்டிடம் கட்டும் போது சித்தாள்வேலை பார்க்க  போனவரு, என்னமோ உங்கப்பா பெரிய பிஸ்தா மாதிரி பீத்திக்கிறே? இனிமேல் எல்லாம் உங்கப்பாவால உள்ளே போகமுடியாது தெரிஞ்சுக்க - சரவணன்.

எங்கப்பா நினைச்சா இப்ப கூட போகமுடியும் ,ஆனா அவரு தான் போகமாட்டேன்கிறாரு - பாண்டி .

ஏன் இன்னமும் செங்கல் பொறுக்க ஆள் கூப்புடுறங்களா! - சரவணன் 

உனக்காகவே நான் போயி காமிக்கிறேன். போயிட்டு வந்து உன்னை வச்சுக்கிறேன் என தன் வீட்டுக்கு வேகமாக கிளம்பினான்.வீட்டுக்கு போனதும் அப்பாவிடம் எப்படியாவது பேசி hotel க்குள் போயிட்டு வந்திரணும் என கங்கணம் கட்டிகொண்டான் பாண்டி.

நம்மளையெல்லாம் உள்ளே விடமாட்டங்கே ன்னு எவ்வளோ அதட்டி பார்த்தும் ,அடித்து பார்த்தும் பாண்டி கேட்கவில்லை. வேறு வழியின்றி கூட்டிபோவதாய் ஒப்புகொள்ள நேர்ந்தது சேகருக்கு. ஆம் பாண்டியின் அப்பா பெயர் சேகர். அவனுக்கும் போகவேண்டும் என்ற ஆசை இருந்தது. அதற்க்கு காரணம் பாண்டியின் அம்மா. கட்டிட வேலை செய்யும் போது அங்குதான் இறந்தாள். அவள் நினைவு தான் அவனை ஒப்புகொள்ள வைத்தது.

மறுநாள், 

        தங்களிடம் உள்ள நல்ல துணிகளை உடுத்தி இருவரும் hotel ஐ நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். வழியில் விளையாடி கொண்டிருந்த சரவணனிடம் ஓடிப்போய் நாங்கள் hotel ஐ சுத்திபாக்க  போறோம்னு  பெருமையாய் சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான் பாண்டி.

ஹோட்டல் வாசலில்,

                 செக்யூரட்டியாய் உருமாறி இருந்த மணி அண்ணனிடம் தன் மகனின் ஆசைக்காக உள்ளே போயி பார்த்துட்டு வந்துடுறோம் என்றான் சேகர். 

ஓ! அதுக்குதான் இப்படி டிப் டாப்பா டிரஸ் போட்டுட்டு வந்திருக்கியாக்கும் .பேருக்குதான் open பண்ணியிருக்காங்க ஆனா உள்ளே வேலை நடந்துக்கிட்டு தான் இருக்கு.போயி மேனேஜரை பார்த்து ஒரு வார்த்தை சொல்லிரு என்றார் மணி அண்ணன்.

உள்ளே போனதும் பழைய ஞாபகங்கள் அவனை வாட்ட ஆரம்பித்தன. இந்த இடத்தில் தான் அதுவரை அவன் அடைந்த அனைத்து சந்தோசங்களையும் இழந்தான்.பாண்டிக்கோ சந்தோசத்தில் கால்கள் சக்கரமாய் சுழல ஆரம்பித்தன.

யாரோ தன்னை தட்டுவதை உணர்ந்து திரும்பி பார்த்தான் சேகர். அதுவேருயாருமில்ல மேனேஜெர் விஷ்ணு தான். ஒருவித பயத்துடனும்,மரியாதையுடனும்  வந்த காரணத்தை கூறினான் சேகர்.

இந்தமாதிரி இடத்துக்கு வரும் போது நல்ல dress போட்டுட்டுவரனும்னு தெரியாது. சரி!சரி! பார்த்துட்டு போ இனிமே இந்தமாதிரி அடிக்கடி வராதே என கண்டிப்புடன் கூறிவிட்டு வேகமாக சென்றான் விஷ்ணு. 

சேகரோ அவன் போகும் வரை பார்த்துக்கொண்டே இருந்தான்.ஏன்னா அவன் மனைவி தவறி விழுந்ததாய் சொல்லும் இடத்தில் விஷ்ணு மட்டுமே நின்றுகொண்டிருந்தான். அவனிடம் கேட்க தெம்பு இல்லாமல் இன்றுவரை முழுங்கிகொண்டே இருக்கான். 

வேகமாய் சென்ற விஷ்ணு திரும்பி வந்து சேகரிடம், ஒரு துண்டுகாகிதத்தை கொடுத்து பத்தாவது மடியில் உள்ள ஹோட்டல் முதலாளியிடம் யாருக்கும் தெரியாமல் கொடுத்துவிடுமாறு சொல்லிவிட்டு சென்றான். அந்த மாடியில் இருந்து தான் தன் மனைவியை இழந்தான் சேகர்.

பாண்டியோ அங்கெ உள்ள செயற்கை நீரூற்றுகளை பார்த்து விளையடிகொண்டிருந்தான். அங்கேயே விளையாடி கொண்டிருக்குமாரும் ,அப்பா பத்து நிமிசத்தில் வந்துடறேன்னு கிளம்பினான் சேகர்.  சேகருக்கோ ஹோட்டல் முதலாளியை ஒருமுறை பார்த்ததாக ஞாபகம். தம்மிடம் ஏன் இந்த சீட்டை கொடுக்கவேண்டும் என தனக்குள்ளே கேள்வி கேட்டு கொண்டே சென்றான். சேகருக்கோ விஷ்ணு மீது  நல்ல அபிப்பராயம் கிடையாது.

இந்த hotel முதலாளியும்,S.P.கோகுலும் மறைமுகமாக மூன்றாம் தர தொழில் செய்பவர்கள். அவர்கள் பெரும்பாலும் கடத்தல் பொருள்களையும், கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கத்தையும் ஹோட்டல் லில் தான் பதுக்கி வைப்பார்கள்.

அதைத்தான் ஹோட்டல் முதலாளி கொடுக்காமல் இழுத்தடித்து கொண்டிருந்தார்.

இரண்டு  நாட்கள் கழித்து  பதுக்கி வைக்கப்பட்ட அறையின் குறியீட்டு எண்ணை விஷ்ணு என்பவர் மூலமாக தெரிவிப்பதாக கூறினார். விஷ்ணுவின் செல்பேசி எண்ணை வாங்கி Vishnu informer என குறித்து வைத்து கொண்டார்.


ஹோட்டல் முதலாளி சொன்னதுபோலவே ரகசிய குறியீட்டு எண்ணை வேறொரு ஆள் மூலமாக விஷ்ணு அனுப்பி வைத்தான்.

அதில்

 Mr.கோகுல்,

S W H2 6F - இதுதான் குறியீடு. கவனம்.



-விஷ்ணு.

 ஆனால் அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு ஹோட்டலுக்கு யாருக்கும் தெரியாமல் வந்தார் S.P.கோகுல் . அந்த சமயத்தில் ஹோட்டல் முதலாளியின் ரூமுக்குள் வேகமா உள்ளே நுழைந்தார். ரூமுக்குள் யாரும் இல்லாததால் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டிருக்கும் போதுதான் சேகர் துண்டு சீட்டுடன் உள்ளே நுழைந்தான். ஹோட்டல் முதலாளி என நினைத்து துண்டுசீட்டினை S.P.கோகுலிடம் கொடுத்தான் சேகர்.  அதில் 

Sir,

எஸ்.பி கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம்.


-விஷ்ணு 

அந்த காகிதத்தை கொடுத்துவிட்டு சேகரும் ,பாண்டியும் அளவில்லா சந்தோசத்துடன் வெளியேறினார்கள் இனி நடக்க இருக்கும் களேபரம் தெரியாமல்.

தான் நினைத்தது போலவே ஹோட்டல் முதலாளியும், விஷ்ணுவும் ஏதோ சதி செய்வதை உறுதிபடுத்தி கொண்டார் S.P.கோகுல் . அச்சமயத்தில், அவரே எதிர்பாராத வண்ணம் விஷ்ணுவிடம் இருந்து போன் கால். போன் காலை  கோபத்துடன் வெறித்து பார்த்துக்கொண்டே எடுத்தார்.





போன் காலில், தான் கொடுத்தது பொய்யான குறியீடு எனவும், உண்மையான ரகசிய குறியீடு வேண்டுமானால் ...... என பேரம் பேச ஆரம்பித்தான் விஷ்ணு .





1 comments:

Unknown said...

கதை நல்லா இருக்கு. முடிவு இன்னும் விளக்கமாக இருந்திருக்காலாம்.
வாழ்த்துகள்.
அப்படியே என்னோட கதையையும் படிச்சுடுங்க..
http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html

:a: :b: :c: :d: :e: :f: :g: :h: :i: :j: :k: :l: :m: :n:

Post a Comment