எந்த வண்டி நமக்கு கொடுத்தாலும் லொட லொட ன்னு தானே நீ ஓட்டுறே! சாயங்காலம் 4 மணிக்கு வந்துருய்யா, அது வரைக்கும் SI ய ஸ்டேஷன்ல இருக்க சொல்லு என சலித்துக் கொண்டே வீட்டிற்குள் வந்தார் இன்ஸ்பெக்டர் செல்வம். பேருக்கு ஏத்த படி செல்வம் வெளியே எங்கே இருந்தாலும் வீட்டிற்குள் பொருக்கி வைத்து விடுவார்.
சிறிது நேரத்துக்கு பின்,
செல்வம் : என்ன வீட்டுல யாரயும் காணோம்?
செல்வத்தின் மனைவி : சிவசு எப்பவும் போல வெளியே போயிட்டான். வைரம் காலேஜ் போயிட்டா. அவளுக்கு இப்ப வர்ற நேரம் தான் . வேலைக்காரி நாலு நாளைக்கு அப்புறம் இன்னைக்கு வந்துட்டு உடனே போயிட்டா. என்னன்னு தெரியல வந்ததுல இருந்து அவ மூஞ்சியே சரியில்லே. என்ன பிரச்சனையோ .....
செல்வம்: இப்ப வைரம் ஒழுங்கா காலேஜ் போறாளா .
செல்வத்தின் மனைவி: ம .... போறாங்க........
செல்வம் : நேத்து ஏட்டு ஒரு பாக்ஸ் கொண்டாந்தாரே அது எங்கே?
செல்வத்தின் மனைவி : அதை பீரோவுக்குள்ளே வச்சுட்டேங்க( பெருமிதத்துடன்)
சில மணி நேரங்களுக்கு முன்பு.........
மருத்துவமனைக்குள்....
உன்னால மட்டும் தான் முடியும் காமினி. நீ இதை செஞ்சாதான் என்பதற்குள் சார் வேற வழியே இல்லையா என இடை மறித்தாள் காமினி. நீ எதுக்கும் பயப்படாத.. அவன நான் காப்பாத்துறேன் .உனக்கும் எதுவும் வராது. எல்லாம் நான் பார்த்துக்குறேன்.எவ்வளோ சீக்கிரம் இதை செய்யுறியோ நல்லது உனக்கு தான். டாக்டர் வர்றாரு நான் வெளியிலே நிக்கிறேன்.
வெளியில்,
ரெண்டு போலீஸ் கான்ஸ்டபில் ஒருவனை அடிபட்ட காயத்துடன் அழைத்து வந்தனர்.
"ஏம்பா இன்ஸ்பெக்டர் மகளை போயி ரூட்டு விடலாமா. உன் ரேஞ்சுக்கு ஆசை படுய்யா .. எல்லாம் படத்த பார்த்து கேட்டு போயி கிடக்குதுங்க . அடி பட்டா தான் சரி வரும்" என்று காயம் பட்டவனிடம் இருவரும் அட்வைஸ் செய்து கொண்டிருந்தனர்.
சார், என்னாச்சு ஆஸ்பத்திரிக்கு வந்துருக்கீங்க. உடம்பு எதுவும் சரியில்லையா என்று இருவரில் ஒரு கான்ஸ்டபில் காமினியை பார்த்துட்டு வந்தவரிடம் கேட்க, நார்மல் செக் அப் தான் என்று மழுப்பினார்.
அப்பா நாங்க வர்றோம் சார்...
உனக்கு இவர யாருன்னு தெரியலையா... இவரு தான் பரந்தாமன் . நான் சொன்னேன்ல அன்னைக்கு அவரே தான். ரெம்போ நேர்மையான ஆளு என்று ரெண்டு கான்ஸ்டபிளும் பேசிக்கொண்டு வந்தனர்.
காமினி உங்களுக்கு ஒன்னும் ஆகல. நீங்க நார்மலா தான் இருக்கீங்க. ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியாகிடும் என்றார் டாக்டர் .
டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.
இதை சற்றும் எதிர்பாராத நர்சு, திடுக்கிட்டு கூச்சலிட்டாள். வெளியில் நின்று கொண்டிருந்தவரூம் எந்த வித சலனமும் இல்லாமல் , ஒருவரை கூப்பிட்டு கண்ணை காட்ட அவனும் காமினியை நோக்கி விரைந்தான்.
சிறிது நேரத்தில், காயம் பட்டு வந்தவனும் கண்ணாடி வழியே தப்பித்தான். ரெண்டு போலிசும் அவனை பிடிக்க ஓடினர்.
சில மணி நேரத்திற்கு பின்,
சில மணி நேரத்திற்கு பின்,
இன்ஸ்பெக்டர் செல்வத்தின் வீட்டில் வேலையெல்லாம் முடித்து , ஒரு வித படபடப்புடன் வேகமா நடந்து வந்து கொண்டிருந்தாள். தனக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்குது என்று தன்னை தானே நொந்து கொண்டாள். தான் செய்தது துரோகமா இல்லையா என மனசுக்குள்ளே ஒரு பட்டி மன்றமே நடத்தினாள். தன்னை ஒருவன் பின் தொடர்கிறான் என்று புரிந்து கொண்டாள். அவன் பரந்தாமன் சார் அனுப்பிய ஆளாக தான் இருப்பான் என்று நம்பிக்கையுடன் வேகமா நடக்க ஆரம்பித்தாள்.
வேகமாக காமினி போகும் போது இடையில் மறித்தான் சிவா .
நீயா ? எனக்கு ஒண்ணும் தெரியாது ... எல்லாம் அய்யா தான் செஞ்சாரு என்னை விட்ரு...எல்லாம் தெரிந்த நீயே இப்படி பண்ணலாமா என கெஞ்சினாள். ஆனால் எதையும் கேட்காமல்
ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
இப்ப வைரம் எங்கே இருக்கா என சொல்லு என மிரட்ட ஆரம்பித்தான் ... நான் எல்லாம் சொல்லிடுறேன் என்னை விட்ரு என கேஞ்சலானால்.....அவளை நான் எப்படி லவ் பண்ணுனேன்னு உனக்கு நல்லா தெரியும்.. என்றான் சிவா.,..
சத்தியமா உன்னைய தான் லவ் பண்றா... இப்ப கூப்பிட்டாலும் அவ வருவா என பதில் கூறினாள் காமினி...
சரி நீ போ. இப்ப நான் அவளை பார்க்கணும்.. என்றவுடன் அவள் இருக்கும் இடத்தை சொல்லி விட்டு நகர்ந்தாள் காமினி....
சில மணி நேரத்திற்கு பின்,
காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.
சார் நீங்க சொன்ன மாதிரி எடுத்துட்டு வந்துட்டேன் ... இனிமே நீங்க சொன்ன மாதிரி செய்யணும்.....
கவலைபடாதே காமினி எல்லாம் நான் பார்த்துக்கிறேன் ....... கவலைபடாம போ.... என்றார் பரந்தாமன் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,