Monday, March 15, 2010

தினம் காதலி

எவ்வளோ! வேகமா கிளம்பினாலும் கரெக்ட் டைம் க்கு ஆபீஸ் போக முடியல. ஏன்டா ராஜா , 9.30 மணி ஆபீசுக்கு 8 மணிக்கு கிளம்புறே .. கொஞ்சம் வேளை இருக்கு மணி . இரு நானும் கிளம்பிட்டேன்.. சேர்ந்தே ரெயில்வே ஸ்டேஷன் போவோம் ... சரி வேகமா கிளம்பு .......

ஐயோ ! train வந்துருச்சு வேகமா ஓடி வாடா மணி இந்த traina புடிசுறலாம்.
ஏன்டா ராஜா நீ இந்த ட்ரெயின் ல வரலையா....... கூட்டமா இருக்கு நீ போ.. நான் அடுத்த train ல வரேன் ... ok da .. நான் கிளம்புறேன் ..... bye டா ராஜா ....

இப்போ நான் மட்டும் ரெயில்வே ஸ்டேஷன் ல ...

இன்னைக்கு என்ன அவளை காணோம் ..... எப்பவும் இந்த டைம் ல தானே வருவா ?. சுற்றி திரும்பி பார்த்த பின்,ஒ ! இங்க நிக்கிறாளா ! ஐயோ எவ்வளோ அழகா இருக்கா இன்னைக்கு. தினம் யார்ட தான் பேசுவாளோ தெரியல ...யார்டயாவது பேசிக்கிட்டே இருக்கா . எப்படித்தான் எல்லார்டையும் friendlya பேசுறாளோ தெரியல ....... train வேற வந்துருச்சு, இன்னும் என்ன தான் பேசுவாளோ ... அப்பாடா வந்துட்டா . வண்டியிலே ஏறும் பொது அவ என்னைய பார்த்து சிரிக்கிற மாதிரியே இருக்கு ...... train ல உட்கார இடம் கிடைச்சும் உட்காரம என்னையவே பார்க்கிறாலே ... ஓர கண்ணால அவ என்னைய பார்க்கும் போது எனக்கு பறக்குற மாதிரி இருக்கு . எனக்கு அவ ரெண்டு கைய்ய புடிச்சு என் கன்னத்திலே வைக்கணும் போல இருக்கு . எவ்வளோ நேரம் அவளை பார்த்தாலும் அலுக்கவே மாட்டேங்குது. நாளைக்கு எப்படியும் அவகிட்டே பேசிடனும், இல்லன்னா என் Ph no யாவது கொடுதிரனும் . அவ ஸ்டாப் வருதே.... இறங்கிருவாலே. அவ கூட போக முடியாட்டாலும் train கதவு வரைக்குமாவது போகணும்னு ஆசை.. நான் அவ பின்னாடி நிக்கிறத பார்த்துட்டா. நான் அவளை பின்னாடி இருந்து அவளை ரசிக்கிறது அவளுக்கு ரொம்ப புடிச்சுருக்குன்னு நினைக்கிறேன் .. railway ஸ்டேஷன் ல train நின்னுருச்சு. அவளும இறங்கிட்டா ஆனா போகாம platform லையே நின்னு என்னையவே பார்க்குறா. நான் அவளை பார்த்தும் பார்க்காதது போல அவளையே பார்த்துக்கிட்டே இருக்கேன் . train கிளம்பி போகும் போது , அவ ஏதோ சைகை காட்டுனா .. எனக்கு சந்தோசம் தாங்க முடியா விட்டாலும் என்ன சொன்னான்னு புரியலே . நாளைக்கு எப்படியும் அவ கிட்ட பேசிரனும்னு முடிவாயிட்டேன் .

அடுத்த நாள்,
மணி நான் கிளம்புறேன் bye da . இன்னைக்கு அவளுக்கு முன்னாடியே station போய் நிக்கனும்னு வேகமா போனேன் .. ஆனா முடியல அவ எனக்கு முன்னாடியே வந்துட்டா .... train மெல்ல ஊர்ந்து கொண்டிருக்கும் போது சுற்றி பார்த்துட்டு அவ ஏறுறா. ஒரு வேளை என்னைய தான் தேடுரான்னு நினைக்கிறேன் . நானும் அதே train ல ஏறிட்டேன் .. என் துரதிஷ்டம் அவ ஏறுன கோச்சுல ஏற முடியல .இன்னைக்கு எப்படியாவது அவ கிட்ட பேசிடணும்னு முடிவா இருந்தேன். train ல வச்சு பேசுனா எல்லாரும் பார்ப்பாங்க . அதனால அவ இறங்குற ஸ்டேஷன்ல வச்சு பேசிரனும் . அவ கிட்ட என்ன பேசணும் எப்படி பேசணும்னு எனக்குள்ளே பேசி பார்த்துக்கிட்டேன் ....

சிறிது நேரத்துக்கு பிறகு,
அவ இறங்குற ஸ்டேஷன் வந்துருச்சு ... நானும் இறங்கிட்டேன் . ஆனா அவளை மட்டும் காணோமே ... ஒரு வேளை இறங்காம போயிட்டாளோ. ச்சே .... அவ ஏறுன கோச்சுல ஏறி இருந்தா இப்படி miss பண்ணிருக்க மாட்டேனே . பின்னாடி இருந்து யாரோ கூப்பிடுற மாதிரி இருக்குன்னு திரும்பி பார்த்தா அவ நிக்கிறா. அதுவும் என்னைய பார்த்து சிரிச்சுக்கிட்டே நிக்கிறா ... அவளுக்கு முன்னாடி என்னால பேசவே முடியல.. நான் பயப்படுறத பார்த்துட்டு அவளே பேசின ...


நான் உங்கள ரொம்ப தடவ ஸ்டேஷன் ல பார்த்திருக்கேன் . நீங்களா கூப்பிடுவீங்கன்னு நினைச்சேன் . ஆனா நீங்க கூச்ச பட்டு பேசாமலே இருந்துட்டீங்க .. அதனால தான் நானே இன்னைக்கு வந்துட்டேன் . வாங்க போகலாம் . எங்கே ? பயப்படாம வாங்க ..நமக்கு பாதுகாப்பான இடம் இருக்கு அங்கேயே போயிடலாம் ...அங்கே யாரும் வரமாட்டாங்க ... பேசிக்கிட்டே என் கைய்ய புடிச்சு நடக்க ஆரம்பிச்சுட்டா ............எவ்வளோ காசு வச்சு இருக்கீங்க ? 1000 ரூபாவெல்லாம் பத்தாது .... போற வழியிலே ATM இருக்கு, அங்கே எடுத்திடலாம் .........

1 comments:

Ramesh said...

ரொம்ப இயல்பான நடைல எழுதி இருக்கீங்க..நல்லா இருக்கு...ஆனா இண்ட்லில என்ன குழப்பம்..வேற எதோ வருது..அப்புறம்..உங்க ஃபார்மட்ல தேதி வராம இருக்கு இல்லையா அதை சரி செய்யறது எப்படின்னு ஒரு பதிவு போட்டுருக்கேன்..பாருங்க...

http://rameshspot.blogspot.com/2010/08/undefined.html

:a: :b: :c: :d: :e: :f: :g: :h: :i: :j: :k: :l: :m: :n:

Post a Comment