Thursday, January 20, 2011

பரதேசியும்! ஒரு தேசியும் !

                                 நிராயுதபாநியானால்
                                 எல்லோரும் விட்டுவிட்டு
                                 செல்வார்கள் - என்னை
                                 தொட்டுவிட்டு சென்றார்கள்
                                 படிப்பிற்கு விலைபோகாவிடினும்
                                 என் சதைபிடிப்பிற்க்கு
                                 விலையானேன்.
                                                               - மஞ்சுளா.


ஹலோ! மஞ்சுளா நான்தான் பாண்டி பேசுறேன்.
எங்கே இருக்கே?
வீட்டுலதான் இருக்கேன். இன்னைக்குதான் இந்தபக்கம் கண்ணு தெரிஞ்சதாக்கும். ஏன் வீட்ல யாரும் இல்லையோ? என்றாள் மஞ்சுளா.(செல்லமாக மஞ்சு)
என் பொண்டாட்டி அவ ஸ்கூல் பசங்கள கூட்டிட்டு டூர் போயிருக்கா. நானும் என் மகளும் தான்  இருக்கோம்.ரெம்போ நாளா உன் நினைப்புதான். இன்னைக்குதான் நேரம் கிட்டுச்சு என்று இளித்தான் பாண்டி.

அதானே பார்த்தேன் வீட்ல யாரும் இல்லேட்ட தானே என் நினைப்பு வரும். ஆன எனக்கு 5 மணிக்கு மேல வேற வேலை இருக்கு,அதனால நாளைக்கு வா என்றாள் மஞ்சு.

நாளைக்கா?  என் பொண்டாட்டியே வந்துடுவா. அதுனால இன்னைக்கே வர்றேன். 5 மணிக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு அதுக்குள்ள என்று கெஞ்ச ஆரம்பித்தான் பாண்டி.

சரி வா! அஞ்சு மணிக்குள்ள நீ கிளம்பிடனும். வரும் போது ரெண்டு பிஸ்கட் பாக்கெட்டும், அரை லிட்டர் பாலும் வாங்கிட்டு வா என்றாள் மஞ்சு.

அடுத்த பத்தாவது நிமிடத்தில்,

வெளியில் யாரும் பார்க்காமல் இருக்கா வேண்டும் என்ற படபடப்பிலும், மஞ்சு வீட்டிற்குள் வந்துவிட்ட பரபரப்பிலும் மஞ்சு மீது பாய ஆரம்பித்தான். சிறிது நேரத்திற்குள் ஊதுபத்தி சாம்பல் போல் சோர்ந்து கிடந்தான் பாண்டி.

களைந்த ஆடையை சரிசெய்துவிட்டு, வேகமா கிளம்புங்கள் என்றாள் மஞ்சு.
என்னது?  கிளம்புறதா!. இதுக்காகத்தான் என்  குழந்தைய  கூட  பக்கத்துவீட்லே விட்டுட்டு வந்துருக்கேன். இன்னைக்கு ரெண்டு மூணு வாட்டியாவது பண்ணாம விடமாட்டேன் என்று அடம்பிடித்தான் பாண்டி.

இம்புட்டு ஆசை இருக்கிறவன் வெள்ளன வந்துருக்கணும். இப்போவந்து போகாம அடம்புடிச்சா? . அஞ்சு மணிக்குள்ள போயிடுவேன்னு நீ சொன்னதாலதான் உன்னைய வர சொன்னேன்.இப்படி வந்துட்டு ஏமாத்துனே??????  என்று கோபமாக பார்த்தாள் மஞ்சுளா.

சரி!சரி! இதைமட்டுமாவது செய் என்று அவனது சிற்றின்பத்தை நிறைவேற்றி கொண்டான்  பாண்டி. அவனது இச்சை முடிந்தவுடன் களைந்த ஆடைகளை சரிசெய்துவிட்டு அவளின் வரலாறை விசாரித்தான் பாண்டி.

ரெம்போ நாளா உன்கிட்ட  கேக்கனும்னு நினைச்சேன், நீ எப்படி இந்த தொழிலுக்கு  வந்தே என்றான் பாண்டி.

அத ஏன் கேக்குறே? என் வாழ்க்கைய  நானே தொலைச்சுட்டேன்.
என்னைய என் வீட்டுல வசதியாகத்தான் வளர்த்து கல்யாணமும் செஞ்சு வச்சாங்க. அவரும் என்னைய ராணிமாதிரி பர்த்துகிட்டாறு. வேலைன்னா மாடா உழைப்பாரு. என் மேல கொள்ளபிரியம்.ரெம்போ பாசமாகத்தான் இருந்தாரு.அந்த பாசம் மனசுக்குதானே. உடம்புக்கு இல்லேயே.......
ஒத்த புள்ள போதும்னு என்ன்ன தொடாம விட்டுட்டாரு.

உடம்புசூடு தாங்காம பக்கத்துவீட்டுகாரன் தொந்தரவுக்கு சம்மதிச்சுட்டேன். அன்னைக்கோட என் வாழ்கையவே குழிதோண்டி புதச்சுட்டேன். அவருக்கு போயி துரோகம் பண்ணிட்டோமேன்னு நானே என்னைய கேவலமா திட்டினேன். அவன்கூட படுத்தது எப்படியோ தெரிஞ்சு போயி என்கிட்டே வந்து கோபமா கேட்டாரு.. நானும் அவரு கால்ல  விழுந்து, தெரியாம பண்ணிட்டேன்னு கதறுனேன். நான் அவருக்கு பண்ணுன துரோகத்த மனசுல வச்சுகிட்டே போனவரு ஆக்சிட்டேன்டாயி வெறும் உடம்பாத்தான் வந்தாரு.

அவரு போயி கொஞ்ச நாளைக்கு அப்புறம் அந்த பக்கத்து வீட்டுக்காரன் அவன் சபலத்துக்கு என்னைய கூப்பிட்டான். என் மனசும் உடம்பும் கேக்காட்டியும் என் குழந்த வயிறு கேட்டுச்சே சோத்த! அதுனால என் உடம்ப வித்து என் புள்ளைக்கு சோறுபோட ஆரம்பிச்சேன். அவன் மூலமா உன்னைய மாதிரி அவன் கூட்டாளிகளும் வர இப்படி தெருநாயா நிக்கிறேன் என்றாள் மஞ்சுளா.

அதற்குள் அவள் கண்களில் வடிந்த கண்ணீர் அவளது மார்பகத்தை நனைத்துவிட்டிருந்தது.

அவனோ தரையையே பார்த்துகொண்டிருந்தான்...........

நான் இப்போகூட என் மாகாண ஸ்கூல்ல இருந்து கூப்பிடத்தான் போறேன். காலைல உன்னைய மாதிரி எத்தனபேருட்ட படுத்தாலும், சாயங்காலம் அஞ்சு மணியிலே இருந்து என் மகன் கூட இருக்கிறதுதான் சுகமே. அதனால்தான் உன்னைய கிளம்புன்னு  சொன்னேன். என்றாள் மஞ்சுளா.

தன்னுடன் படுத்ததற்கான கூலியை மேஜையின் மீது வைத்துவிட்டு தான் மகளை பார்க்க சென்றான் பாண்டி ஒரு வித அவமானத்துடன்.
"மறக்காம பின்னூட்டம் இடவும்! ஓட்டையும் சேர்த்து அமுக்கிட்டு போங்க."

Monday, January 10, 2011

காதல் கண்ணாடி

ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!
                                                                                      - பாரதி
 
காதல் என்பது மற்றவர்களுக்கு பல அர்த்தங்களில் தெரியும். ஆனால் காதலர்களுக்கு ஒரே அர்த்தம் தான். அது வெவ்வேறு உணர்வுகளில் அன்பு என்ற மையத்தில்தான் முடியும்.
                    ஹாய்! எப்படி இருக்கே என்று கிருஷ்ணனின் குரல் கேட்டதும் கமலாவால் வேறெதுவும் பேச வாய்ப்பில்லை. அவனுடன் குலைந்து பேசுவதை தவிர. அதுவும் வீட்டிற்கு தெரியாமல் பீச்சுக்கு வர சொன்னதை தட்டவும் முடியவில்லை.மறுக்கவும் முடியவில்லை. அவன் சொன்ன டையத்துக்கு வருகிறேன் என்று பதில் சொல்லத்தான் முடிந்தது.
                               அவன் சொன்னது போல் தேனாம்பேட்டை சிக்னலில் காத்திருந்தாள். அவன் சொன்ன டையத்தையும் மீறி தாமதமாக வந்தான் கிருஷ்ணன். இருவரும் சந்தித்த பின் பைக்கில் யாருக்கும் தெரியாமல் துப்பட்டாவை மூடியவாறு சென்றாள் கமலா.
                   நமக்கு கல்யாணம் ஆனபின் இருவரும் வாரா வாரம் பீச்சுக்கு போக வேண்டும்.உனக்கு வேறெங்கும் போக வேண்டும் என்று தோன்றுகிறதா? என்றவாறு பல கேள்விகளை கேட்டுகொண்டே சென்றான். எதற்கும் நெருக்கம் காண்பிக்காமல் அமைதியாய் வந்ததை உணர்ந்த கிருஷ்ணன், ஏன் என்னாயிற்று? என்றான். திடுக்கிட்ட கமலாவோ ஒன்றுமில்லை வேறு யாராவது பார்த்து விடுவங்களோ என்ற பயத்தினால்தான் சரியாய் கவனிக்கவில்லை என்று மழுப்பினாள்.அவள் மலுப்பியதற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது.அவளும் சில காலம் பின்நோக்கி செல்ல ஆரம்பித்தாள்.

    அதே சிக்னலில் கண்ணன், கமலா வருவாள் என்று நீண்ட நேரம் காத்திருப்பான்.ஆனால் அவனை காத்திருக்க வைப்பதில் என்னதான் சுகமோ தினமும் தாமதமாகத்தான் வருவாள். அன்றும் அவ்வாறே நடந்தது. அவள் பைக்கில் ஏறியதுதான் தாமதம்,வண்டி டாப் கியரில் பறக்க ஆரம்பித்தது. அவர்களுக்கு அருகில் ஒரு தம்பதியினர் தான் குழந்தைகளோடு சென்றதை பார்த்து கண்ணனின் காதில் எதோ கிசுகிசுத்து கொண்டே பீச்சுக்குள் சென்றனர். அந்த கடலோர புதைமணலில் நடைபயிலும் குழந்தை போல மெதுவாக சென்றனர்.அந்த மிக பெரிய மணற்பரப்பில் ஒரு ஓரமாய் பதுங்கி கொண்டனர். தெருநாய்கள் கூட சுதந்திரமாக காதலிக்கையில் நாம மட்டும் பதுங்க வேண்டியிருக்கிறதே என்று சலித்து கொண்டான் கண்ணன். காதல் பேச்சுக்கள் அந்த கடல் அளவையும்  தாண்டிசென்றது.                                        சிறிது நேரத்திற்கு பின், நேரமாகிவிட்டது கிளம்பலாம்,நேற்றும் வீட்டுக்கு லேட்டாதான் போனேன். இன்னைக்கும் போன எங்கப்பா தொலைத்து விடுவார் என்று கிளம்புவதிலே குறியை இருந்தாள் கமலா.

                                   மனதில் ஒருவித நடுக்கத்துடனே வீட்டிற்கு புறப்பட்டாள்.நடுக்கத்துக்கு காரணம் அவளின் பக்கத்து வீட்டுகாரர் பார்த்ததுதான். வீட்டிற்குள் நுழைந்ததுதான் தாமதம் அவளின் அப்பா கோபத்தில் அடிக்க முனைந்தார். தெருநாய் மாதிரி ரோட்டில திரியிறேன்னு  அவளின் அம்மாவும் தன் பங்குக்கு வசை பாட ஆரம்பித்தாள்.

  நான் அவரைத்தான் காதலிக்கிறேன்,அவரையே கல்யாணம் செய்துவைங்கன்னு எவ்வளோ கெஞ்சினாள். ஆனால் தன் மகள் விலைமகளாகி விட்டதை போல எண்ணி புலம்ப ஆரம்பித்தனர்..........................................................................................
.........
.........!
.........?
 இறுதியா நான் சொல்லும் மாப்பிள்ளைய செய்யாவிடில் இருவரும் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டினர். அதிர்ச்சி!அழுகை!ஏமாற்றம் என விரக்தி அடைந்தாள் கமலா.
.......
......
ஓரிரு வாரங்களுக்கு பிறகு கமலாவை பெண்பார்க்க வந்தனர் கிருஷ்ணனின் குடும்பத்தார்.அவளின் கன்னித்தன்மை இவர்கூட தான் கழிய வேண்டும் என்று கமலாவின் பெற்றோர்கள் முடிவு செய்திருந்ததால் எல்லாம் சுபமாக முடிந்தது.

சீறிட்டு வந்த பைக் பீச்சில் சர்ரென நின்றது. கமலாவும் தன் சுயநினைவுக்கு வந்தாள். என்னிடம் பேசுவதற்கு பயமா இருக்கா? இல்லே கூச்சமா இருக்கா? என காதல் மொழி பேச ஆரம்பித்தான் கிருஷ்ணன்............
...............
...............
கிருஷ்ணனிடம் வேண்டா வெறுப்பாய் உரையாடிவிட்டு வீட்டிற்குள் வந்தாள் கமலா. அங்கு வீட்டிற்குள், காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என்ற விவாதத்தை அவளது பெற்றோர்கள் ரசித்து பார்த்துகொண்டிருந்தனர்.