Monday, January 10, 2011

காதல் கண்ணாடி

ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!
                                                                                      - பாரதி
 
காதல் என்பது மற்றவர்களுக்கு பல அர்த்தங்களில் தெரியும். ஆனால் காதலர்களுக்கு ஒரே அர்த்தம் தான். அது வெவ்வேறு உணர்வுகளில் அன்பு என்ற மையத்தில்தான் முடியும்.
                    ஹாய்! எப்படி இருக்கே என்று கிருஷ்ணனின் குரல் கேட்டதும் கமலாவால் வேறெதுவும் பேச வாய்ப்பில்லை. அவனுடன் குலைந்து பேசுவதை தவிர. அதுவும் வீட்டிற்கு தெரியாமல் பீச்சுக்கு வர சொன்னதை தட்டவும் முடியவில்லை.மறுக்கவும் முடியவில்லை. அவன் சொன்ன டையத்துக்கு வருகிறேன் என்று பதில் சொல்லத்தான் முடிந்தது.
                               அவன் சொன்னது போல் தேனாம்பேட்டை சிக்னலில் காத்திருந்தாள். அவன் சொன்ன டையத்தையும் மீறி தாமதமாக வந்தான் கிருஷ்ணன். இருவரும் சந்தித்த பின் பைக்கில் யாருக்கும் தெரியாமல் துப்பட்டாவை மூடியவாறு சென்றாள் கமலா.
                   நமக்கு கல்யாணம் ஆனபின் இருவரும் வாரா வாரம் பீச்சுக்கு போக வேண்டும்.உனக்கு வேறெங்கும் போக வேண்டும் என்று தோன்றுகிறதா? என்றவாறு பல கேள்விகளை கேட்டுகொண்டே சென்றான். எதற்கும் நெருக்கம் காண்பிக்காமல் அமைதியாய் வந்ததை உணர்ந்த கிருஷ்ணன், ஏன் என்னாயிற்று? என்றான். திடுக்கிட்ட கமலாவோ ஒன்றுமில்லை வேறு யாராவது பார்த்து விடுவங்களோ என்ற பயத்தினால்தான் சரியாய் கவனிக்கவில்லை என்று மழுப்பினாள்.அவள் மலுப்பியதற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது.அவளும் சில காலம் பின்நோக்கி செல்ல ஆரம்பித்தாள்.

    அதே சிக்னலில் கண்ணன், கமலா வருவாள் என்று நீண்ட நேரம் காத்திருப்பான்.ஆனால் அவனை காத்திருக்க வைப்பதில் என்னதான் சுகமோ தினமும் தாமதமாகத்தான் வருவாள். அன்றும் அவ்வாறே நடந்தது. அவள் பைக்கில் ஏறியதுதான் தாமதம்,வண்டி டாப் கியரில் பறக்க ஆரம்பித்தது. அவர்களுக்கு அருகில் ஒரு தம்பதியினர் தான் குழந்தைகளோடு சென்றதை பார்த்து கண்ணனின் காதில் எதோ கிசுகிசுத்து கொண்டே பீச்சுக்குள் சென்றனர். அந்த கடலோர புதைமணலில் நடைபயிலும் குழந்தை போல மெதுவாக சென்றனர்.அந்த மிக பெரிய மணற்பரப்பில் ஒரு ஓரமாய் பதுங்கி கொண்டனர். தெருநாய்கள் கூட சுதந்திரமாக காதலிக்கையில் நாம மட்டும் பதுங்க வேண்டியிருக்கிறதே என்று சலித்து கொண்டான் கண்ணன். காதல் பேச்சுக்கள் அந்த கடல் அளவையும்  தாண்டிசென்றது.                                        சிறிது நேரத்திற்கு பின், நேரமாகிவிட்டது கிளம்பலாம்,நேற்றும் வீட்டுக்கு லேட்டாதான் போனேன். இன்னைக்கும் போன எங்கப்பா தொலைத்து விடுவார் என்று கிளம்புவதிலே குறியை இருந்தாள் கமலா.

                                   மனதில் ஒருவித நடுக்கத்துடனே வீட்டிற்கு புறப்பட்டாள்.நடுக்கத்துக்கு காரணம் அவளின் பக்கத்து வீட்டுகாரர் பார்த்ததுதான். வீட்டிற்குள் நுழைந்ததுதான் தாமதம் அவளின் அப்பா கோபத்தில் அடிக்க முனைந்தார். தெருநாய் மாதிரி ரோட்டில திரியிறேன்னு  அவளின் அம்மாவும் தன் பங்குக்கு வசை பாட ஆரம்பித்தாள்.

  நான் அவரைத்தான் காதலிக்கிறேன்,அவரையே கல்யாணம் செய்துவைங்கன்னு எவ்வளோ கெஞ்சினாள். ஆனால் தன் மகள் விலைமகளாகி விட்டதை போல எண்ணி புலம்ப ஆரம்பித்தனர்..........................................................................................
.........
.........!
.........?
 இறுதியா நான் சொல்லும் மாப்பிள்ளைய செய்யாவிடில் இருவரும் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டினர். அதிர்ச்சி!அழுகை!ஏமாற்றம் என விரக்தி அடைந்தாள் கமலா.
.......
......
ஓரிரு வாரங்களுக்கு பிறகு கமலாவை பெண்பார்க்க வந்தனர் கிருஷ்ணனின் குடும்பத்தார்.அவளின் கன்னித்தன்மை இவர்கூட தான் கழிய வேண்டும் என்று கமலாவின் பெற்றோர்கள் முடிவு செய்திருந்ததால் எல்லாம் சுபமாக முடிந்தது.

சீறிட்டு வந்த பைக் பீச்சில் சர்ரென நின்றது. கமலாவும் தன் சுயநினைவுக்கு வந்தாள். என்னிடம் பேசுவதற்கு பயமா இருக்கா? இல்லே கூச்சமா இருக்கா? என காதல் மொழி பேச ஆரம்பித்தான் கிருஷ்ணன்............
...............
...............
கிருஷ்ணனிடம் வேண்டா வெறுப்பாய் உரையாடிவிட்டு வீட்டிற்குள் வந்தாள் கமலா. அங்கு வீட்டிற்குள், காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என்ற விவாதத்தை அவளது பெற்றோர்கள் ரசித்து பார்த்துகொண்டிருந்தனர்.

1 comments:

வைகறை said...

இப்படியே எல்லாக் காதலர்களுக்கும் அமைந்தால் எத்தனை சுகமாக இருக்கும்!! சிறுகதை அருமை!!

என்றும் நட்புடன்..
வைகறை
வாருங்கள்: www.nathikkarail.blogspot.com

:a: :b: :c: :d: :e: :f: :g: :h: :i: :j: :k: :l: :m: :n:

Post a Comment